பக்கம்:சிலம்பின் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு காண் காதை

61


உண்டு; அவர்களைச் சாரணர் என்று குறிப்பிட்டனர். அவர்கள் மத குரு ஆவார்கள்.

இம்மூவரும் சென்றபோது சாரணர் ஒருவர் அங்கு வந்து அந்தச் சிலாதலத்தில் அமர்ந்திருந்தார். அவர் சமண மத குருவாகக் கருதப்பட்டவர். இவர் விண்வழியே வந்து மண்ணகத்து ஆங்காங்கு இருந்து அருள் செய்தார்; அது அவர் அரும்பணியாக இருந்தது.

சாரணர் பெருமகனாரைக் கண்ட இம்மூவரும் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினர். இம்மூவரைக் கண்ட அச்சாரணர் இவர்கள் சோகக் கதைகளைக் கேட்க முற்படவில்லை; கண்டதும் இவர்கள் நிலை யாது என்பதை அறிந்த ஞானி அவர்; இத்துயரங்களை நேரிடை களைய முற்படவில்லை.

அவரவர்கள் தம் வினைகளுக்கு ஏற்ப விளைவுகளை அடைவது இயல்பு என்பதை நன்கு அறிந்தவராகத் திகழ்ந்தார். அவர் விருப்பு வெறுப்பு அற்ற மனநிலை கொண்டவர் ஆதலின் இவர்களைக் கண்டு எந்த வருத்தமும் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் கவுந்தி அடிகளுக்கு அறவுரை கூறினார். மூன்று பேருண்மைகளை அவர் கவுந்தி அடிகளுக்கு உரைத்து அருள் செய்தார். “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்றும், “வாழ்க்கை நிலையற்றது” என்றும், “பிறப்பு அறுக்க அருகன் திருவடி வணங்க வேண்டும்” என்றும் அறவுரை கூறினார்.

கவுந்தி அடிகள் பெருமகிழ்வு கொண்டு இறைப் பேரருளை வியந்து போற்றினார். அருகனைப் புகழ்ந்து பேசினார். அருகனின் திருநாமங்களைச் சொல்லி வாழ்த்தினார். சாரணர் பெருமகனார் அவருக்குப் ‘பிறவி நீங்குக;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/62&oldid=964038" இலிருந்து மீள்விக்கப்பட்டது