பக்கம்:சிலம்புத் தேன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1

சிலம்பின் சிறப்பு

'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்று நினைத்தாலே நம் மேனி சிலிர்க்கும்; மனம் குளிரும்; தோள்கள் வீங்கும்; துயரங்கள் நீங்கும். உணர்வின் கடலாய்-ஒழுக்கத்தின் இமயமாய்-வாழ்ந்த ஒரு பெருந்தமிழ் மகனார் புவியரசாள்வதிலும் கவியரசாள்வதே அழியாப் பெருமையும் பயனும் அளிக்கவல்லது என்று கருதிய அறவோர்-செய்தளித்த பாகு தமிழ்க் காவியமன்றோ சிலப்பதிகாரம்? கலையின் இனிமையை - கற்பின் திண்மையை - வீரத்தின் ஆற்றலை விளக்க எழுந்த தமிழ்ப் பேரிலக்கியம் அன்றோ சிலம்புச் செல்வம்? இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக இடையறாத இலக்கிய வளம் செறிந்து விளங்கும் நம் இன்பத் தமிழ் மொழி கண்ட முதற்பெருந்தேசிய காவியம் அன்றோ சித்திரச் சிலப்பதிகாரம்? ஆம்! அதனாலேதான் அப்பெருங்காப்பியத்தைப் படிக்குந்தோறும் நம் வாய் இனிக்கிறது; மனம் இனிக்கிறது; வாழ்க்கையே இனிக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் இன்பத் தமிழகம் இருந்த ஏற்றத்தினைக் காவிய வடிவிலே எடுத்துக்காட்டும் பெருமை, சிலப்பதிகாரத்தின்