பக்கம்:சிலம்புத் தேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2

சிலம்புத் தேன்

தனி உரிமை. சிலப்பதிகாரம் வரலாற்று உணர்ச்சி படைத்த வல்லாளர்களுக்குத் தோண்டத் தோண்டத் தொலையாத பொன்னும் மணியும் தரும் தொன்மைச் சுரங்கம்; கலையுணர்ச்சியும், இலக்கியத் திறமையும், ஆற்றலும் கொண்டார்க்கு மூழ்கி எடுக்க எடுக்கக் குறையாத முத்து வளம்-கருத்து வளம்கொழிக்கும் காவியக் கடல்; வையத்து வாழ் வாங்கு வாழ விரும்புவார்க்கு ஒளியும் நெறியும் காட்டும் ஒப்பற்ற கலங்கரை விளக்கம். இத்தகைய பெருமை வாய்ந்த சிலப்பதிகார் உலகில் துழைந்துவிட்டால், இளங்கோ அடிகள் நம் ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அருள் கூர்ந்து படைத்து அன்பு கடர்ந்து ஊட்டும் அமிழ்தினும் இனிய தமிழ் விருந்தின்-ஒன்பான் சுவையும் ஒருங்கே பொருங்திய இலக்கிய விருந்தின்-இன்பத்தையும் பயனேயும் அளந்துரைக்க வல்லார் யார்?

'சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்’

-பதிகம், 58-60

என உறுதி கொண்டு இளங்கோ அடிகள் படைத்த இலக்கிய உலகில் நாம் காணாத காட்சி இல்லை; கேளாத கீதமில்லை; முகராத வாசமில்லை; சுவையாத பொருளில்லை; உற்றறியாத உணர்வில்லை. நனவே போலும், கனவுலகில்