பக்கம்:சிலம்புத் தேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் சிறப்பு

3

நாம் காணும் இன்பங்கள் அத்தனையும் இளங்கோவின் காவிய உலகில் பெறலாம்; பெற்றுக் களிக்கலாம்.

அதில், 'படைப்புக் காலம் தொட்டு'த் தமிழகத்தைப் பழுதின்றி ஆண்டு வந்த மூவேந்தர் குடியும் செம்மாந்து சிறந்து விளங்கும். சோழநாட்டின் புலிக்கொடியும், பாண்டி நாட்டின் மீனக் கொடியும், சேர நாட்டின் விற்கொடியும் தமிழகமெங்கும் தலை நிமிர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும். நெல்லின் வளமும் கலேயின் வாழ்வும் நிறைந்து கிடக்கும் சோழ வ ள நா ட் டி ல். முத்தின் வளமும் நீதியின் திறனும் முதிர்ந்து திகழும் பாண்டி நாட்டில். வேழத்தின் வளமும் வில்லின் ஆற்றலும் செறிந்து விளங்கும் சேரநாட்டில். புகாரின் பெருமையை-மதுரையின் மாண்பை-வஞ்சியின் வளனே அதில் கண்ணுரக் காணலாம். தமிழகத்தின் தலைநகர்களில்-துறைமுகவாயில்களில்-நத்தி நம் பொருள் பெறுதற்கு யவனர் முதல் காசினி வணிகர் யாவரும் வந்து காத்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாய்த் திகழும்.

சிலப்பதிகார உலகில் முடிவேந்தர் மூவரின் செங்கோல் ஆட்சியால் தமிழகம் மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்தாலும், செந்தமிழின் ஆட்சியால் ஒன்றாக ஒற்றுமைப்பட்டிருந்த ஒப்பற்ற காட்சியைக் கண்டு உவகை கொள்ளலாம். வேந்தரால் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தின்