பக்கம்:சிலம்புத் தேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

சிலம்புத் தேன்.

ஒருமைபாட்டைக் கண்ணகியின் வீரச் சிலம்பால் உலகறிய-தமிழன் உள்ளமறியச் செய்யும் இளங்கோவின் இதயத் துடிப்பைக் காணலாம்; கேட்கலாம்.

உழவரோதை, விழவரோதை சிறந்தார்க்க, சோழவளநாட்டைக் காத்து நடந்து செல்லும் காவேரித் தாயை வாழ்த்தி வணங்கலாம்; புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியை-வையையெனும் பொய்யாக் குலக்கொடியைக்-கோவலனும் கண்ணகியும் கண்டு கை தொழுது மதுரைக்குச் செல்லும் காட்சியைப் பார்த்து மனமுருகிக் கண்ணிர் சிந்தலாம். ஆரமும் அகிலும் உருட்டி ஆர்வம் கொண்டு பாய்ந்து வரும் பேரியாற்றின் கரையில் வஞ்சிநாட்டு வேந்தனது வீரமுரசொலி கேட்டு விம்மிதம் கொள்ளலாம். இந்திர விழா-கடலாடு விழா-இத்தகைய பழந்தமிழ்த் திருவிழாக்களைக்-கலை விழாக்களைக்-கண்டு களிவெறி கொள்ளலாம். மாதவி பாடிய கானல் வரியைக் கேட்கலாம். அதன் விளைவாக வடநாட்டு வேந்தர்-நாவடக்கம் இன்றித் தமிழ் மன்னரைப் பழித்த கனக விசயர்-முடித்தலை நெறிந்த முழக்கத்தைக் கேட்கலாம். -

உயர்ந்து விளங்கும் இமயமும், விரிந்து கிடக்கும் விந்தியமும், வீங்குநீர் அருவி வேங்கடமும், பரந்து கிடக்கும் நீலகிரியும், பைந்தமிழ் வளரும் பொதிகையும், தென்னவன்