பக்கம்:சிலம்புத் தேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் சிறப்பு 5

புகழ் கூறும் சிறுமலையும் நம் கண் முன்னே தோன்றும்; இந்தியாவின் இன்பத் தமிழகத்தின் பெருமையை எடுத்துப் பேசும்.

ஆம்பலும் தாமரையும், முல்லையும் இருள் வாசியும், காங்களும் கடம்பும், சண்பகமும் பித்திகையும் மொட்டவிழ்ந்து முகிழ் நகை பூத்து நறுமணம் கமழும். மதுரைத் தென்றலும் புலவர் நாவில் பொருந்திய பொதிகைத் தென்றலும் மெல்லென வீசி நம் மெய் சிலிர்க்கச் செய்யும்; 'இன்பத் தமிழுக்கு ஓர் உவமை ஆகேனா?' என்று நம்மிடம் வந்து கெஞ்சாமல் கெஞ்சும்.

சோழனது செங்கோல் - பாண்டியனது நீதி-சோனது வீரம் இவற்றை எல்லாம் நேரில் காணலாம். பழந்தமிழகத்தின் அரசரைக் காணலாம்; வணிகர்களைப் பார்க்கலாம்; வீரர்களைச் சந்திக்கலாம்; அந்தணர்களை அறிமுகம் செய்துகொள்ளலாம்; குறவர்களோடு குலாவலாம்; வேடர்களோடு ஆடலாம் ; ஆயர்களோடு பாடலாம் ; மன்னர்களையும் கண்டு மகிழலாம்; மக்களோடும் பழகிப் பழகி இன்புறலாம.

சிலப்பதிகார உலகில் கலையரசி மாதவியின் சிறந்த நடனத்தைக் காணலாம்; அது நம் கண்களைக் கவரும், கவுந்தி அடிகளின் கருணேயை உணரலாம் ; அது நம் கருத்தை உருக்கும். மாடல மறையோன் அறிவுரையைக் கேட்கலாம்;