பக்கம்:சிலம்புத் தேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量雄 சிலம்புத் தேன்

கரும்பும் இ ள நீரும் கட்டிக்கனியும்’

போலத்தித்திக்கும் சுவைக்காவியமாம் சிலப்பதி காரத்திற்கு எத்தனையோ சிறப்புக்கள் உண்டுஉலக இலக்கியக்கூடத்திலும், தமிழ் இலக்கிய அரங்கிலும். அவற்றுள் தலையாய பெருமைகள் இரண்டு: ஒன்று, சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியமாய் - மக்கள் இலக்கியமாயிருப்பது. இது உலக இலக்கியங்களுக்கு இடையே சிலம் பிற்குள்ள தனிப்பெருஞ்சிறப்பு. மற்றென்று, தமிழ் இலக்கிய வரலாற்றிற்கே - வளர்ச்சி நெறிக்கே-ஒரு திருப்பு மையமாய் விளங்கும் பெருமை. இவ்விரு பெருமைகளும் சிலப்பதி காரத்திற்குக் காலக் கடவுளும் கவிதைத் தெய் வமும் தந்த இணேயில்லாத இரு புகழ்ப் பரிசுக ளாகும்.

பாரத நாட்டின் பழம்பேரிலக்கியங்களையும் ஐரோப்பிய நாட்டு ஆதி காவியங்களையும் செல் வச் சிலப்பதிகாரத்தோடு ஒப்பிட்டுச் சீர் தூக் கிப் பார்க்கும் எவர்க்கும் இந்த உண்மை விளங் காமல் போகாது. வடமொழியின் ஆதிகாவியம் வேந்தர்கள் புகழையும் வீ க் ைதயும் விதங் தோதும்-தேவாதி தேவர்களின் திருவிளே யாடல்களுக்குப் புகழ்மாலே சூட்டும்-வான்மீகி இராமாயணமே ஆகும். கிரேக்கர்களின் பழம் பெருங்காப்பியம் ஹோமர் பாடிய இலியது' என் பதே ஆகும். மெணலஸ் என்ற பேரரசன் அழகு மனேவி ஹெலனைப் பாரிஸ் என்ற இலிய நாட்டு இளவரசன் சிறை பிடித்தலால் மூண்ட இரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/19&oldid=560573" இலிருந்து மீள்விக்கப்பட்டது