பக்கம்:சிலம்புத் தேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் சிறப்பு #1

மாயணமே அப்பழங்காவியம். வர்ஜில் என்ற பாவாணர் பாடிய 'ஈனிது என்பதே இறந்து போன இலத்தீன் மொழியின் பழமைக் காப் பியம். உரோமப் பேரரசினத் தோற்றுவித்த 'ஈனியஸ் என்ற அரசர் பெருமானது வரலாற் அறுப் புகழ் பாடும் பெருமையே அக்காப்பியத் தின் பெருமை. இவ்வாறு எந்த நாட்டுப் பழங் காப்பியத்தினே ஆராய்ந்தாலும் அது முடி சார்ந்த மன்னரின் பழம் பெ ரு மை பாடும் புராணமாகவே காட்சியளிக்கிறது. ஆல்ை, முடிமன்னர் இசைபாடும் அக்காவியக் குவியல் களுக்கு இடையே தமிழ் மக்களின் முதற்காப் பியமாகிய சிலப்பதிகாரமோ, மக்க ள் புகழ் பேசும் குடிமக்கள் காப்பியமாய் ஒளிர்கிறது."

சிலப்பதிகாரக் காவியத்தின் தலைவர் யார்? சோழன? பாண்டியன? சோன? இவர்களுள் எவரும் அல்லர். வீரக் கண்ணகியும் அவள் காதல் கணவன் கோவலனுமே அக்காவியத் தின் தலைவர். இளங்கோ அடிகள் காவியம் இயற்றியது சோழனது செங்கோலின் பெருமை பேசவா? பாண் டியனது வெண்கொற்றக் குடையின் புகழ் விளக்கவா? சோன் ஏந்திய வீரவில்லின் ஆற்றலைக் கூறவா? ஆம்; இவை யனேத்திற்கும் சிலப்பதிகாரத்தில் இடம் உண்டு. ஆனல், இளங்கோவின் இதயம்-காவியத்தின் கருப்பொருள்-கண்ணகியின் காற்கிலம்பின் வரலாற்றை-ஆற்றலை-வையகம் அறியச் செய்வதே. இளங்கோ அடிகள் படைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/20&oldid=560574" இலிருந்து மீள்விக்கப்பட்டது