பக்கம்:சிலம்புத் தேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிலம்புத் தேன் இலக்கிய விண்ணில் பால் ஒளி பரப்பும் அழகு

நிலா, கண்ணகிக் கடவுளே. கரிகால் வளவன்நீதி மன்னன் நெடுஞ்செழியன்-சேரன் செங் குட்டுவன் இவர் யாவரும் அவ்வெண்மதியத்தின் அழகிற்கு உறு துணே புரிந்து கிற்கும் உடுக்களே.

ஆர்புனை சென்னி அரசர்க் களித்து,

செங்கோல் வளைய உயிர்வா ழாமை

தென்புலம் காவல் மன்னவற் களித்து,

வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை பாவதும்

வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை

வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்

குடதிசை வாழும் கோற்றவற் களித்து '

- நடுகற்காதை, 811-217.

பெருமை செய்த கண்ணகியின் வரலாறன்ருே சேரர் தரும் சிலப்பதிகாரம்? ஆம்! கற்பரசி கண்ணகியின் வரலாற்றின் தொடர்பில்லையேல் சிலப்பதிகாரத்தில் வரும் சேர சோழ பாண்டி யர் பெருமை எல்லாம் கிலவில்லா வானத்தில் தோன்றிய விண் மீன்களின் நிலைதானே? எனவே, உலகாளும் தமிழ் மன்னரெல்லாரும் அரசர் குடியில் பிறவாத ஒரு தமிழ் மகளின் கற்பின் மாண்பை விளக்கச் செங்கே ல் ஒச்சியும்-உயிரினத் துறந்தும்-ஒன் ர்ை முடித்தலே நெருக்கியும்-பணிபுரிவதை விளக்கும் இளங்கோவின் இலக்கியம் தலை சிறந்த குடி மக்கள் காப்பியம் அன்ருே? உலகில் தோன்றிய ஆதி காவியங்கள் யாவும் கோவேந்தர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/21&oldid=560575" இலிருந்து மீள்விக்கப்பட்டது