பக்கம்:சிலம்புத் தேன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் சிறப்பு #3.

குடியின் பெருமையையும் கோலின் பெருமை. யையுமே கூறிக் கொண் டி ரு க் கத் தமிழ் மக்களின் தலை நாள் காப்பியம் மட்டும்,

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும்!”

-வஞ்சினமாலை, 36-87. என்று அல்வழிப்பட்ட அரசனே அழிப்பதே அறநெஞ்சு படைத்த மறப்பெண்டிர் கடமை என்று விளக்கிக் காட்டும் வரலாறய்-தேசிய உணர்வு பொங்கி எழும் மக்கள் இலக்கியமாய்இருத்தல் இளங்கோ அடிகள் நம் மொழிக்கும் இனத்திற்கும் செய்த பெருமையினும் பெருமை அன்ருே ?

அடுத்த நிலையில் ஆராயும்போது இளங்கோ அடிகள் காவியத்தால் தமிழ் இலக்கிய வரலாற் றிற்கே நேர்ந்துள்ள மாறுதல், எண்ணுவார் இதயத்தை இன்பக் கடலாடச் செய்யும். சிலப் பதிகாரம் தோன்றும் வரை தமிழ் இலக்கியம் வளர்ந்திருந்த முறை வேறு ; அதற்குப் பின் தமிழ் இலக்கியம் வளர்ந்த வகை வேறு. சிலப் பதிகாரம் தோன்றுவதற்கு முன்னர் - சங்க காலத் தமிழ் இலக்கியம் தனிகிலேச் செய்யுட் களே மட்டுமே பெற்றிருந்தது. உலகம் கண்டி ராத அளவு உள்ளத்தின் உயர்வும் எண்ணிக் கையும் படைத்திருந்த சங்கத் தமிழ்ப் புலவர் கணக்கற்ற தமிழ் மலர்களே இன்பத் தேன் சிந்: தும்இலக்கிய மலர்களைத்-தமிழ்த்தாயின் சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/22&oldid=560576" இலிருந்து மீள்விக்கப்பட்டது