பக்கம்:சிலம்புத் தேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 சிலம்புத் தேன்

வடிகளில் வைத்து வழிபாடு ஆற்றினர். ஆல்ை, ஒன்ருகத் தொடுக்கப் பெருமல் தனித்தனியாய் இருந்த காரணத்தால் அத்தீஞ்சுவை மலர் களுள் எத்தனையோ நறுமணப் பூக்களைத் தமிழ் மக்கள் காலம் என்னும் கடுங்காற்று வாரிச் செல்லவிட்டுவிட்டார்கள். இக்குறையை முதன்முதல் உ ண ர் ங் த தமிழ் நெஞ்சம் இளங்கோ அடிகளின் இலக்கிய நெஞ்சம்." அவர், தமிழ் அன்னேக்குத் தமிழ்ப் புலவோர் ஆற்றும் தொண்டு கால அலைகளையும் வென்று வாழ வேண்டுமானல், உதிர்ந்த மலர்களால் அவள் திருவடிகளை வழிபடும் வழிபாட்டைவிடத் தமிழ் மலர்களால் தொடுத்த இலக்கிய மாலை சூட்டி அவளை வழிபடுவதே சாலச் சிறந்த பயன் தருவது என்று கருதினர். அவ்வாறு அவர் கருதிய கருத்தின் உருவமே சிலப்பதி காாம். அவ்வாறு அவர் எண்ணிய எண்ணத் தின் வெற் றியே இன்று நாம் காணும் எத்தனையோ தமிழ்ப்பெருங்காவியங்கள் ஆம்! தமிழிலக்கிய வளர்ச்சிக்கே ஒரு புது நெறி கண்ட புரட்சிப் புலவர் இளங்கோ அடிகள். அவர் காட் டி ய செறியின் விளைவுதான்தமிழ்த் தாய்க்குக் காவியக் கோவில் கட்டி இலக்கிய விருந்து படைத்து வழிபாடாற் ற அவர் தொடங்கிய முயற்சியின் வெற்றிதான்இன்றைய தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/23&oldid=560577" இலிருந்து மீள்விக்கப்பட்டது