பக்கம்:சிலம்புத் தேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் சிறப்பு iş

இளங்கோ அடிகள் வழி காட்டினர்; பின் வந்த புலவர்கள் அவர் காட்டிய நல்வழியை மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் பின்பற்றினர் கள். சிலப்பதிகாரம் என்ருேர் மணியாரம் பூண்ட தமிழ்த் தாயின் மார்பில் மேலும் பல பாமாலைகள் அணி செய்தன. அவள் அழகும் ஒளியும் முன்னிலும் பன்மடங்கு சிறப்புடைய னவாயின.

இப்படிப்பெற்ற தாய்க்கும் பிறந்த பொன் னுட்டிற்கும் பல்லாற்ரு லும் பெருமை தேடித் இந்த பெரியோரின்-இளங்கோ அடிகளின்புகழ் கற்றவ வானினும் நனி பெரிது! அத் தகைய அண்ணலின் புகழைப்பாட அமரகவி பாரதியாரினும் தலை சிறந்த கவிஞர் நம் நூற் முண்டில் வேறு யார்?

யாமறிந்த புலவரிலே

கம்பனப்போல் வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கனுமே

பிறந்ததில், உண்மைவெறும்

புகழ்ச்சி இல்லை." என்பது தேசிய கவிஞர் பாரதியாரின் பாட்டு. பாரதியார் போற்றிய மூவருள்ளும் தனிச் சிறப்பு வாய்ந்த தமிழ்க் கவிஞர் இளங்கோ அடிகள். அவர் தரும் தமிழ் விருந்து-சிலப் பதிகாரப் பெருவிருந்து-ஏனேய விருந்துகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/24&oldid=560578" இலிருந்து மீள்விக்கப்பட்டது