பக்கம்:சிலம்புத் தேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சிலம்பின் குறிக்கோள்

தேனிலே ஊறிய செந்தமிழின்-சுவை தேரும் சிலப்பதிகாரத்தை ஊனிலே எம்முயிர் உள்ளளவும்-நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே ! ? என்று மனமுருகிப் பாடினர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. செஞ்சொற் காப்பியமாம் சிலப்பதிகாரம் தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை' கிறைந்து விளங்குகிறதாம்! அதை ஊனிலே உயிர் உள்ளளவும் ஓதி உணர்ந்து இன்புற வேண்டுமாம்! என்னே கவிமணியின் தமிழ்க் காதல்! பாட்டுக்கொரு புலவராகிய பாரதி யாரும் அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்த கிறுகிறுப்பில் எத்தனையோ அமுதத் தமிழ்க் கவிதைகளே அள்ளி வழங்கிய கவிமணியும் நாவார் மனமாரப் போற்றிய சிலப்பதிகாரத்தின்-தமிழ் இனம் கண்ட தலைசிறந்த தேசிய காவியத்தின் - முற்றத் துறந்த முனிவராகிய இளங்கோ அடிகள் செய்தருளிய அவ்விணையில்லா இலக்கியத்தின்-உயிர் நாடியான குறிக்கோள் எது எனக் காண்பது பொருத்தமும் பயனும் உடையது அன்றோ ?