பக்கம்:சிலம்புத் தேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சிலம்புத் தேன்

பல்சுவையும் மலிந்து கிடக்கும் செல்வக் களஞ்சியமான சிலப்பதிகாரம் நமக்கும் வைய கத்திற்கும் தெரிவிக்கும் செய்திகள் பலப்பல. அவற்றுள் எல்லாம் தலையாய செய்திகள் யாவை? அவற்றிற்கெல்லாம் உயிர் நாடியாய் விளங்கும் குறிக்கோள் யாது? கடவுள் தத்துவம் போலக் காவிய உலகினுள் மறைந்து கிடக்கும் அந்த ஒப்பற்ற உயிர்த் தத்துவம்-இலட்சியத் தத்துவம்-எது ?

இவ்வினாவிற்கு விடை காண இளங்கோ அடிகளின் இலக்கியத்தைக் காவியத்தின் குறிக்கோளைத் தேடும் கண்ணோட்டத்தோடு காண வேண்டும். அதோடு ஓங்கி உயர்ந்த மாடத்தின் அழகை மேலும் ஒருபடி சிறப்பித்துக் காட்டும் சித்திரம் போல-பரந்து விரிந்து கிடக்கும் மாநகரின் பெருமையையும் பெரு மிதத்தையும் உலகறியக்காட்ட உயர்ந்து நிற்கும் கோபுரம் போல-மேடையேறி மின்னம் கொடியென ஆடும் மங்கையின், அழகுக்கு அழகு செய்யும் ஆபரணம் போல, சிலப்பதிகாரத்திற்கு அணிந்துரையாய் விளங்கும் பதி கத்தையும் ஊடுருவிப் பார்க்க வேண்டும்.

குமரி முதல் இமயம் வரை ஒரு மொழி வைத்து ஆண்ட செந்தமிழ் நாட்டு வேந்தன்-சேரமன்னன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் ஈன்ற அருமைப் புதல்வர் இருவர். அவருள் மூத்தவன் சேரன் செங்குட்டுவன், இளையவர்