பக்கம்:சிலம்புத் தேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் #9

இளங்கோ அடிகள். பெரும்புகழ் வேந்தனுக்கு அருமந்த மைந்தராய்ப் பிறந்த இளங்கோ, துவரத் துறந்த தாயோய்-தமிழ் மரபிற்கு மாறுபட்டு வாழ்வதிலும் அரசாள் செல்வத்தை அக்கணமே உதறி எறிந்து அடிகளாய் வாழ்வதே அறம் எனக் கருதிய அண்ணல். அவ்வாறு அவர் கருத-அரண்மனை வாழ்வை விட்டு விலக-மன்னவன் கோயிலை மறந்து குணவாயிற்கோட்டத்தில் குடிகொள்ளக் காரணம்,யாது? அதை இளங்கோ அடிகளே கூறுகிறார் ஆம். ஐயாயிரத்தோடிகள் கொண்ட பெருங்காவியத்தில் வேறு எங்கும் தம்மைப் பற்றி எதுவும் பேசாத அப்பெருமகனும், தம் சுயசரிதத்தைக் காவியத்தின் முடிவில் சேர வேந்தன் கட்டிய கோயிலில் எழுந்தருளியிருந்த பத்தினித் தெய்வமாம் கண்ணகியே தேவந்தி மேல் தோன்றித் தம்மைப் பார்த்துக் கூறியதாகக் கூறுகிறார். சிலப்பதிகாரக் காவியத்தில் இளங்கோ கூறும் சுயசரிதமாக அமைந்துள்ள அப்பகுதி, படிக்கப் படிக்கத் தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும் :

'உலகமன்னவரெல்லாரும் தன்னடி போற்றி வணங்க, கனகவிசயர் முடித்தலே நெரித்த சேரன் செங்குட்டுவன், மாடலமறையோன் கூறிய அறிவுரை கேட்டு, அனோடு வேள்விச்சாலை நோக்கிச் சென்றுவிட்டான். அதன்பின் தெய்வக் கண்ணகியின் திருமுன் யானும் சென்றேன். அந்நிலையில்கண்ணகித்