பக்கம்:சிலம்புத் தேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 21

அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேணடுந் தூரத்து அந்தயில் இன்பத் தரசாள் வேந்தென்று என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி’

(வரந்தரு காதை: 168-188) ‘அண்ணன் இருக்கத் தம்பி ஆள்வது அரச மரபன்று ; தமிழினத்தின் புகழ் கெடுக் கும் பழிச் செயலாகும். அதுதான் சோதிடம் கூறும் செய்தி என்றால், அந்தச் சாத்திரத் தைக் கோத்த பொய்வேதக் குப்பை என்று காட்டுவதே கடமை என க் க ரு தி க் துறவு கொண்டு குணவாயிற் கோட்டம் சேர்ந்தார் இளங்கோ அடிகள். துன்பம் நிறைந்த புவி யாள் செல்வம் அவரை விட்டு நீங்கியது; ஆனால், இன்பமே நிறைந்த கவியாள் செல்வம் அவரிட மே அடைக்கலம் புகுந்தது!

இவ்வாறு குணவாயிற்கோட்டத்தில் அரு ளின் திருவாய்-அமைதியின் அழகுச் செல்வ மாய்-வீற்றிருந்த இளங்கோ அடிகளிடம் ஒரு நாள் சேரநாட்டு மலையில் வாழும் குறவர் திரண்டு ஒடி வந்தனர். அந்நாள், இளங்கோ அடிகள் வாழ்விலும், இன்பத் தமிழகத்தின் வரலாற்றிலும் பொன்னாள் எனப் போற்றத் தகுந்த நன்னாள் ஆகும். உதடும் உள்ளமும் பதை பதைக்க ஓடிவந்த குறவர்கள், அடிகளின் முன் தாங்கள் கண்ட காட்சியை-மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை-உணர்ச்சி நிறைந்த மொழிகளால் எடுத்துரைத்தார்கள். அடிகளே.