பக்கம்:சிலம்புத் தேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2? சிலம்புத் தேன்

கண்டறியாதன கண்டோம்! பொன் போலும் தாதுடன் பூத்து விளங்கும் வேங்கை மரமொன் றின் நிழலிலே ஒரு முலை இழந்தா ளாய் ஒருத்தி வந்து நின்ருள். அவள் ஒரு திருமா பத்தினி என அறிந்தோம். அவள்பொருட்டு, தேவர் கோனாகிய இந்திரன் தமர் நெருங்கி வந்து அவள் காதல் கணவனைக் காட்டி எங்கள் கண்கள் காண அவளோடும் விண்ணுேக்கிச் சென்றனர். அந்நிகழ்ச்சி எங்களுக்குப் பெரு வியப்பாய் இருந்தது. அடிகளே , நீங்களும் அதை அறிந்தருள வேண்டும், என்று கரவற்ற நெஞ்சத்துடன் கை கூ ப் பி த் தொழுது இளங்கோ அடிகளிடம் தாங் கள் கண்ட காட்சியை எடுத்துரைத்தார்கள். இவ்வாறு இளங்கோ அடிகளிடம் மலை நாட்டு க் குறவர்கள் தங்கள் மனங்கவர்ந்த பெருமாட்டி யினைப்பற்றி வியப்புணர்ச்சி பெருகக் கூறும் அற்புதக் காட்சியோடுதான் சிலப்பதிகாரப் பதிகம் தொடங்குகிறது. ஆம், சிலப்பதிகாரக் காவியத்தைப் படிக்கத் தொடங்குவார் கண் களுக்கு முதல் முதலாகத் தோன்றும் காட்சி இதுதான். அருளே வடிவாகக் கொண்ட குன்றக் குறவர்கள் ஒருங்கு கூடித் தாங்கள் முன் செய்த தவப் பயனால் கண் குளிரக் கண்ட திருமாபத்தினியை அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். என்ன இனிய காட்சி அது! கண்ணகித்தாய் கன்னித் தமிழகத்தை விட் டுப் பிரிந்து காதற்கணவனோடு விண்ணவர்