பக்கம்:சிலம்புத் தேன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 絮

நாடு புகுநத அக்காட்சியை - மண்ணுலக மடந்தை விண்ணுலகத் தெய்வமாக மாறிய இறுதித் திருக்காட்சியை-காணும்பேறு பெற் றவர் தமிழ் நாட்டு வேந்தரும் அல்லர்; புலவரும் அல்லர்; தமிழகத்தின் பழங்குடி மக்களாகிய மலைக் குறவர்களே. ஏன்? சேரவேந்தன் செங்குட்டுவனுக்கும் இளங்கோ அடிகளுக்கும் வீரபத்தினியின் செய்தியை முதன்முதல் தெரி வித்தவர்களும் இம்மலைவாழ் தமிழ் மக்களே ஆவார்கள். கண்ணகிக்காகக் கற்கோயில் கட்ட இமயம் வரை எந்தச் செங்குட்டுவன் சென்றனோ அவனும், சொற்கோயில் அமைக்க எந்த இளங்கோவின் நெஞ்சம் குமுறியதோ அவரும், கண்ணகியைப் பற்றி முதன்முதல் தெரிந்துகொண்டது தங்கள் நாட்டு மக்களா லேயே-மக்களின் தெய்வமாகவே,

கண்ணகிபற்றிக் குறவர்கள் வந்து கூறிய நேரத்தில் இளங்கோ அடிகள்பால் சென் றிருந்த தண்டமிழ்ச் சாத்தனார், அடிகளே, அந்நிகழ்ச்சிக்குக் காரணமான கதையை யான் அறிவேன், என்று கூற ஆரம்பித்துச் சொல் நயமும் பொருள் நயமும் நிறைந்த சொற்களால் வீரக்கண்ணகியின் வரலாற்றை எடுத்துரைக்கலானார்:

ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்

பேராச் சிறப்பின் புகார்நகரத்துக் கோவல னென்பானுேர் வாணிகன், அவ்வூர் நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு