பக்கம்:சிலம்புத் தேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சிலம்புத் தேன்

ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக் கண்ணகி யென்பாள் மனைவி, அவள் கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன் அதுகொண்டு மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை; ஈங் கிருக்கென் றேகிப் பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் கண்டனன் பிறனோர் கள்வன் கையென, வினைவிளை காலம் ஆதலின், யாவதுஞ் சினை யலர் வேம்பன் தேரா னுகிக் கன்றிய காவலர்க் கூஉய், அக் கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்'ெகனக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நிலைக்களங் காணாள் நெடுங்கணர் உகுத்துப் பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகந் திருகி நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய பலர்புகழ் பத்தினி யாகும் இவளென'

(பதிகம் : 12-86) இளங்கோ அடிகளுக்குச் சாத்தனர் கூறினர். சாத்தனரின் வாய்மொழி கேட்ட இளங்கோ அடிகள், புலவர் பெருமானீர், வினை விளை காலம் என்றீரே. யாது அவ்வினை? என்றார். அதற்கு மதுரை மூதூர் வெள்ளியம்பலத்தில் நள்ளிருளில் தாம் துயின்றுகொண்டிருந்த போது துயரமே நிறைந்து நின்ற மறக்கற்