பக்கம்:சிலம்புத் தேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

岔翁 சிலம்புத் தேன்

சிய நெ ஞ் சத் தி ற்குப் பெருவிருந்தாயிற்று. அவர் உள்ளக் கடலில் வகை வகையான எண்ண அலைகள் எழுந்து முழங்கலாயின. ‘இனி ஒரு கணமும் வீரபத்தினியின் வரலாற் றைப் பாடாது இருக்க முடியாது! சிலப்பதி காரக் காவியத்தைச் செய்யாமல் உறங்க முடியாது!’ என்ற நிலே அவர்க்குக் தோன்றி யது. அதை இளங்கோ அடிகளே எவ்வளவு அழகாகத்-திறமையாக-உ று தி வாய்ந்த குரலில் கூறுவதாகப் பதிகம் பா டு கி ற து பாருங்கள் :

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் துட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள் '

(பதிகம் : 55-60) என்ன உள்ளம்-உறுதி-இ ள ங் கோ அடி களுக்கு!

சிலப்பதிகாரக் காவியம் பிறந்த வரலாற் றைப் பதிகத்தின் ஆசிரியர் இவ்வகையிலே தான் சித்திரித்துக் காட்டுகிறார். தொண்ணுாறு அடிகளைக் கொண்ட பதிகம் ஆறே அடிகளில் மூன்று முக்கிய நோக்கங்களே உலகி ற்கு உணர்த்த வேண்டும் என்ற பேரார்வத்தால் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரக் காவியத் தைச் செய்ய உறுதி கொண்ட வரலாற்றைக்