பக்கம்:சிலம்புத் தேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 27

கூறுகிறது. இப்பகுதி வாயிலாக இளங்கோவடிகள் உள்ளமும், அவர்காவியத்தின் நோக்கங்களாக எவ்வெவற்றைக் கருதியுள்ளார் என்பதும் விளங்குகின்றனவல்லவோ? ஆனால், 'சிலப்பதிகாரப் பதிகத்தின் ஆசிரியர் யார்? அவர் பதிகம் பாடிய காலம் எது?’ என்பவற்றில் கருத்து வேறுபாடுகள் இருப்பது போலவே, காவியத்தின் நோக்கங்கள் பதிகஆசிரியர் சுட்டும் இவையோ, அன்றி வேறு எது? இவையே யெனின், இவற்றுள் தலைமையாயது எது?” என்ற ஆராய்ச்சியும் அறிஞர்களிடையே இருந்து வருகின்றது.

பதிக ஆசிரியர் கூறும் இம்மூன்று நோக்கங்களைத் தவிர வேறு எது இளங்கோவடிகளின்-அவர் காவியத்தின்-குறிக்கோளாக இருக்க முடியும்? பதிக ஆசிரியர் மற்றொரு குறிப்பையும் நமக்கு அறிவுறுத்துகிறார், "நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்"என்று இளங்கோ அடிகள் உறுதியோடு கூறியதைக் கேட்ட சாத்தனர் நெஞ்சம் இன்பக் கடலில் மூழ்கியது. சாத்தனர் நேரில் அறிந்த வரலாறு கண்ணகியின் வரலாறு அவர்தாம் அதை இளங்கோ அடிகளுக்குக் கூறினர். எனினும், அரசு துறந்து அறம் ஆளும் நெஞ்சினராகிய இளங்கோ அடிகள் ஆர்வத்துடன் 'யான் அதைப் பாடுவேன்’ என்று கூறியதும், அடிகளே, அவ்வாறே செய்தருளுங்கள்! சிலப்பதிகாரக்கதை மூவேந்தர்கள் ஆளும் மூன்று