பக்கம்:சிலம்புத் தேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

芝覆 சிலம்புத் தேன்

நாட்டிற்கும் உரியது. தமிழகம் முழுவதற்கும் உரிய கதையை-சேர சோழ பாண்டியர் மூவ ரோடும் தொடர்பு கொண்ட வரலாற்றைமன்னர் வாழ்க்கையையும் மக்கள் வாழ்க்கை யையும் தன்னகத்தே கொண்ட தீஞ்சுவைக் காவியத்தை-முற்றத் துறந்த அடிகளாகிய நீங்களேதான் செய்தருள வேண்டும், என்ற இக்கருத்தெல்லாம் அமைய முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக, என்றார் தண்டமிழ்ச் சாத்தனர். அவ்வாறு அவர் கூறிய அமுத மொழிகள் அருந்தமிழ்ப் புலவரின் பண்பாட்டிற்கே அமைந்த ஒரு விளக்கம் அன்றோ?

சிலப்பதிகாரச் செய்யுள் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்று நற்றமிழ்ப் புலவர் சாத்தனார் நவின்றது இளங்கோ அடிகளின் செவியில் ஒலித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும். அதன் எதிரொலியை நடு கற்காதையின் இறுதிப் பகுதியில் நம்மால் கேட்க முடிகிறது. கண்ணகிக் தெய்வம், நல்ல ஆட்சி முறையிலேதான் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கம் ஒழுகவும்; நங்கையர்க்குக் கற்பு விளங்கும் என்பதைச் சோழ வேந்தனுக்கு விளங்கச் செய்தாள்; நீதிநெறி தவறிச் செங்கோல் வளைந்தால் தமிழ் மன்னர் தம் நல்லுயிரையும் இழப்பர் என்பதைப் பாண்டிய வேந்தனுகக்கு விளங்கச் செய்தாள், வீரத்தால் வஞ்சினம்