பக்கம்:சிலம்புத் தேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் Žg

கூறி மேற்கொண்ட கடமையைச் செய்துமுடித் தால் அன்றித் தமிழ் அரசர் சீற்றம் தணியாது’ என்பதைச் சேரவேந்தனல் விளங்கச் செய் தாள். இக்கருத்தைக் கொண்ட கவியோவியம்,

அருந்திற லரசர் முறைசெயி னல்லது. பெரும்பெயர்ப்பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேத்தும் பத்தினி, யாகலின் ஆர்புனை சென்னி யரசர்க் களித்துச் செங்கோல்வளைய உயிர்வா ழாமை தென்புலங் காவல் மன்னவர்க் களித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை வடதிசை மருங்கின் மன்னவ ஏறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து'

(நடுகற்காதை : 207-317) என்பது.

இது, புகாரிலே பிறந்து, வளர்ந்து, மணந்து, வாழ்ந்து, வருக்தி, மதுரையிலே புகுந்து, கணவனே இழந்து, புலம்பி, அவன் மேல் படர்ந்த பழி துடைக்கப் போராடி, பாண் டியனே வென்று, வீரக் கண்ணகியாய் வஞ்சி சென்று, மலைமீதேறிப் பதினுன்காம் நாளில் இவ்வுலக வாழ்வினை உதறி எறிந்த அன்னையின் வாழ்வு, முடிகெழு மூவேந்தர் ஆட்சியையும் ஆட்கொள்ளும் வல்லமை பெற்றிருந்ததைக் காட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும், இதையே காவியத்தின்