பக்கம்:சிலம்புத் தேன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சிலம்புத் தேன்

இறுதி இலட்சியமாகக் கொள்ளல் தகுமோ? குடிமக்கள் காப்பியமாகிய சிலப்பதிகாரம் கோவேந்தர்களின் அரசியலோடு கண்ணகி வரலாறு கொண்டிருந்த தொடர்பைக் காட்டுவதோடு அமையுமோ?

இவ்வாறே சிலப்பதிகாரத்தின் நோக்கங்கள் இவைதாமோ என்று நம்மைச் சிந்திக்க வைக்கும் பகுதி ஒன்று காவியத்தின் முடி விடத்தை அணிசெய்துகின்றது. இளங்கோ அடிகள் தம் பெருங்காவியத்தை முடிக்கும் நிலையில் தாம் கூறிய சுவை நிறைந்த காவியத்தைச் செவிவாயாக நெஞ்சுகளனாகக் கேட்ட நற்றமிழ் மக்களே நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது அறமணம் கமழும் அப்பகுதி:

'தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வத் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;
ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்;
பொய்க்கரி போகன் மின்; பொருண்மொழி நீங்கன்மின்; அறவோ ரவைக்களம் அகல தணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின் ;
பிறாமனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின் ;
கள்ளும் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்லுமும் யாக்கையும் நிலையா;