பக்கம்:சிலம்புத் தேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 சிலம்புத் தேன்

துவம் போலக் காவியம் முழுவதிலும் அந்த இலட்சிய ஒளி பாய்ந்து பரவிக் கிடக்கின்றது. இளங்கோ அடிகள் தம் காப்பியத் தலைவி யாகிய கண்ணகியை-மறக்கற்புடைய மங் கையை-தெய்வத்திறம் வாய்ந்த நல்லாளைத்தொடக்க முதல் சித்திரித்துக் காட்டும் பாங்கு, அவர் உள்ளத்தில் உறைந்து கிடந்த இலட்சி யத்தை-குறிக்கோளே-நமக்குச் சொல்லாமற். சொல்லி உணர்த்தி வைக்கின்றது.

இளங்கோ அடிகள் ஒரு துறவியர்; வீரத் துறவியர் மணி முடி தரித்து வாழும் மாளிகை வாழ்வை இமைப்பொழுதில் மறந்து, துறந்து, அரசவை விட்டு வெளியேறி, குணவாயிற் கோட் டம் புகுந்த கொள்கை படைத்த துறவியர். துறவறத்தின் எல்லையைக் கண்ட அத்தூயோரின் அகக் கண்களுக்கு இல்லறத்தின் பெருமை புலனாயிற்று ; கற்பின் திண்மை விளங்கலாயிற்று ; தவ வழிப்பட்ட வீரமும் பெருமையும் தோன்றலாயின. அவற்றின் பயனே அவர் செய்த காவியம்.

காதல் வாழ்வையே கடுந்தவ வாழ்வாக்கி வாழ்ந்த தாய் கண்ணகி. அந்தத் தவம் தந்த ஆற்றலாலேயே-வீரத்தாலேயேதுன்புறு வனதோற்றுத்

துயருறு மகளிரைப்போல் மன்பதை அலர்துற்ற

மன்னவன் தவறிழைப்ப