பக்கம்:சிலம்புத் தேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள்

அன்பனை இழந்தேன்யான்

அவலங்கொண் டழிவலோ!

(துன்பமாலை: 35-57.)

என்று ஆத்திரம் கொண்டு அறிவறை போகிய பாண்டிநாட்டு அரசனை எதிர்த்து வழக்காடினாள்.அவன் உடலும் உள்ளமும் உயிரும் அதிர அரசவையில் கண்ணகி தன் அணி மணிக்காற் சிலம்பை எடுத்து உடைத்தெறிந்தாள். தன் தேவியின் சிலம்பில் உள்ள பரல் முத்தாக, கண்ணகி உடைத்த சிலம்பினின்றும் தெறிந்தது மாணிக்கம் எனக் கண்டான் வேந்தன். தாழ்ந்தது அவன் குடை தளர்ந்தது அவன் செங்கோல் கெடுக என் ஆயுள்! என வீழ்ந்து மாண்டான். இதைக் கண்டும் அமையாத கண்ணகியின் சீற்றம் கோநகரையே-கூடல் மாநகரையே-சீறி அழித்தது. வள்ளுவர், கற்புடைப் பெண்டிரின் சொல்லுக்கு மழையும் பணியும் என்றார். சிலப்பதிகாரமோ, மறக்கற்புடை மங்கையின் ஆனைக்குத் தீயும் குற்றேவல் புரியும் காட்சியைக் காட்டுகிறது. கண்ணகி புரிந்த இல்லறத் தவத்தின் எல்லையில்லா ஆற்றலே-குணமெனும் குன்றேறி கின்ற அம்மறக் கற்புடையாளின் மாண் பை-ஒழுக்கத்தால் அவள் பெற்ற உயர்வை-கற்புத் தவத்தால் அவள் பெற்ற பெருமையை-அப்பெருமையின் முன்பு உலகாள் வேந்தர் புகழ் எல்லாம் கதிரவன் முன்னின்ற விளக்கொளியாய் ஒடுங்கும் சிறப்