பக்கம்:சிலம்புத் தேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 சிலம்புத் தேன்

பினை-அச்சிறப்பிலே சொல்லை-செயலை-சிந்தனையை அர்ப்பணிக்கும் உலகம் காணவல்ல ஒற்றுமை இன்பத்தை-உலகிற்குக் காட்டவேண்டும் என்பதே இளங்கோ அடிகளின் இதயத்தில் உறைந்த குறிக்கோளாய் இருந்திருக்க வேண்டும்.

மேல்நாட்டு இலக்கிய ஆராய்ச்சிப் பேரறிஞர் ஒருவர் அருமையாகச் சொன்னர், உண்மையிலேயே மிகச் சிறந்ததோர்இலக்கியத்தின் அடையாளம், எவையேனும் சில புதிய உண்மைகளே-தனக்கு முன் எவராலும் கூறப்படாத உண்மைகளே-தனக்கே உரிய புதிய முறையில் கூறுவதுதான்' என்று'. இக்கருத்தை நினைவிற்கொண்டு பார்க்கும் போது சிலப்பதிகாரத்தின் பெருமை நமக்குத் தெற்றென விளங்கும்.

உயிரனைய தமிழ் மொழியில் முதல் முதலாக ஒரு காப்பியத்தைச் செய்ய நினைத்த இளங்கோஅடிகள், முடிசார்ந்த மன்னர் ஆட்சி பிடிசாம்பலாய் அழிந்து போக நேரிடிலும், அழியாத பெருமை வாய்ந்த ஒழுக்கத்தின்-கற்பின்-தவத்தின் பேராற்றலை விளக்கி, அவ்வாற்றலுக்குத் தலைவணங்கி வழி பாடாற்றி உய்ய விரும்பும் விருப்பத்திலே, தமிழகத்தின் ஒற்றுமை-இந்தியாவின் ஒற்று மை-உலகத்தின் ஒற்றுமை அடங்கிக்கிடக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார். “உலகின் ஒற்றுமையும் உயர்வும் செங்கோல்