பக்கம்:சிலம்புத் தேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள்

ஏந்திய மன்னர்களின் காளியாட்டத்திலோ-கொற்ற வெண்குடையின் சிறப்பிலோ- வேலின் வெற்றியிலோ -இல்லை. ஆனால் உயிரினும் சிறந்த விழுப்பம் தரும் ஒழுக்கவாழ்வாம் தவவாழ்விற்கு நிகழ்த்தும் வீரவழிபாட்டிலேயே அது அடங்கியுள்ளது என்ற உண்மையை உலகுகிற்குணர்த்தப் பெருங்கருணை கொண்ட உள்ளமே இளங்கோவடிகளின் உள்ளமாகும்.

இவ்வுண்மையைச் சிலப்பதிகாரக் காவியத்தில் தொடக்கம் முதல் கண்ணகியை வர்ணித்தப் பாங்கினைக் கூர்ந்து கவனிப்பதன் வாயிலாக நன்கு உணரலாம். கண்ணகி பிறந்த குடும்பமும் புகுந்த குடும்பமும் பெருஞ்செல்வம் வாய்ந்த குடும்பங்களில் இருந்தும் அவளை வர்ணிக்கும்போது தம் அரண்மனை செல்வ வாழ்வின் அனுபவம் சிறிதையும் பயன்படுத்தாமல் விட்டுத் துறந்தார் இளங்கோவடிகள் மாறாக கண்ணகியின் தவக்கோலத்தில் வருணி பதிலையே அவர் ஆர்வம் முந்துகிறது


அஞ்செஞ் சீரடி அணி சிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் மங்கலஅணியின் பிறிது அணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரிய செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்