பக்கம்:சிலம்புத் தேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 37

கண்டு கொதித்தெழுந்த வீரக் கண்ணகியின் மறநெஞ்சைக் கண்ட மதுரை மக்கள், செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்

வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்!

என்று வாய்விட்டுக் கூறுகின்றார்கள். வஞ்சிக் காண்டத்திலோ, குன்றக் குறவர் இவள் போலும் நம் குலத்துக்கோர் இருந்தெய்வம் இல்லை, என்று சேரவேந்தனிடம் சென்று கூறுவதையும், அவன் தன் அரசியை நோக்கி, தேவி, கணவன் மாண்டதும் உயிர் துறந்த பாண்டிமா தேவியிலும், மறக் கற்புடையவளாய் மலைநாடு வந்த மங்கையினும் நீ வியக்கும் சிறந்தோர் யார்? என்ற சிக்கலான கேள்வியைக் கேட்ட சமயத்தில், 'நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்', என்று இருங்கோ வேண்மாள் ஆர்வத்துடன் கூறிய சீரான பதிலையும், அதன்வழி நின்று வஞ்சி வேந்தன் வானவரும் போற்றத் தன் வீரத்தால் பெற்ற கல்கொண்டு கண்ணகிக்குக் கோயில் எடுத்த சிறப்பையும், அக்கோயிலை மன்னவன்,

வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி

உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்