பக்கம்:சிலம்புத் தேன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் புகழ் 45

பனையோலை வாயிலாகச் சிலம்பின் ஒளியைக் காப்பாற்றிய இத்தமிழ்ச் சான்றோர்களின் அடியொற்றித் தோன்றியச் சிலப்பதிகாரத்தை அச்சுவாகனம் ஏற்றி காட்டுமக்களுக்குப் பயனடையுமாறு செய்யத் துடித்த தமிழ்ப் பெரியோர்களைப் பற்றி இனிக் காண்போம்:

பின்னாளில் தமிழகத்தில் தமிழரசு இல்லாக் கொடுமையால் தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைகட்கும் நேர்ந்த தீங்குகள் கணக்கற்றன. எத்தனையோ தமிழ் இலக்கிய, இலக்கண, கலை நூல்கள் கவனிப்பாரற்றுக் கவிராயர் வீட்டுப் பரண்களிலும் மடாதிபதிகளின் பேழைகளிலும் மட்கி மடிந்துகொண்டிருந்தன. அந்நிலையில் தமிழுக்கு நேர்ந்த கொடுமையைச் சகிக்க முடியாத உள்ளங்கொண்டு அல்லும் பகலும் அனவரதமும் உள்ளங்காலெலும்பு தேய ஊரூராய் நடந்து வீடுகண்டவர்போல ஏடுகண்ட போது எக்களிப்புக் கொண்டு தமிழன்னைக்குச் சேவை செய்த அந்த நல்லோர்களை நினைக்கும் போது நம்மை அறியாமல் நன்றி உணர்ச்சியினால் நம் கண் கலங்கும். தந்நலமற்ற தமிழ்ப்பணி புரிந்துவிட்டு இன்று விண்ணவர்க்கு விருந்தாகியுள்ள அவ்வித்தகர்களுக்கு நன்றி உணர்ச்சியால் பெருகிவரும் கண்ணீரையன்றி வேறெதைக் காணிக்கையாக நாம் கொடுக்க வல்லோம்? நீங்கள் தமிழன்னைக்குச் செய்த தலை சான்ற பணிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கையேனும் எங்கள் ஆயுள் முடிவதற்குள் நாங்கள் செய்ய அருள்புரியுங்கள் என்று அவர்களை -