பக்கம்:சிலம்புத் தேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிலம்புத் தேன்

இருத்தலன்றி, உரையின் தொடக்கம் இஃது; இறுதி இஃது, என உணர்தல் அரிது. ஆத லால், யாவரும் எளிதில் உணரத் தொடக்கம் இறுதிகளைப் புலப்படுத்தியும் கடினநடையாய் உள்ளனவற்றை எளிய நடைகளாகச் செய்தும் வேண்டிய இடங்களில் விரித்தும், சுருக்கியும், காலிகிதங்களால் வந்து பொருந்தாதனவற்றை விளக்கியும், கானல் வரிக்கு உரையின்மையால் உரை எழுதியும், அரங்கேற்றுக் காதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங் கள் பல இடங்களிலும் வருதலால் ஆங்காங்கு உணர இங்குச் சுருக்கியும் இவ்வாறு புகார்க் காண்டமும் மதுரைக் காண்டமும் தனித் தனியாய் அச்சைப் பதிப்பிக்கத் தொடங்கிப் புகார்க் காண்டம் உரையோடு அச்சிட்டிருக் கின்றேன். எனக்குக் கிடைத்த பிரதிகளுள் வஞ்சிக்காண்டம் ஒழிய மற்ற இரண்டு காண் டங்களும் இருத்தலால் வஞ் சிக் காண் டம் உரையோடு வைத்திருப்பவர்கள் எனக்குக் கொடுத்து உதவி செய்யின் இந்நூல் கிலேபெறு மளவும் அவர் பெயரும் கிலே பெறும்படி அச் சைப் பதிப்பேன். எனக்குக் கிடைத்த பிரதி களோடு திருமயிலே அண்ணுசாமி உபாத்தி யாயரும் ஒரு பிரதி உதவினர்.

பண்டைக் காலத்தில் அச்சிற் பதிப்பிக் கும் வழக்கம் இன்மையால் தமிழிலுள்ள பெரு நூல்கள் உரைகளோடு பல இறந்தன. எஞ்சி

விருத்த நூல்கள் சிலரிடத்து. அருகி வழங்குக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/57&oldid=560610" இலிருந்து மீள்விக்கப்பட்டது