பக்கம்:சிலம்புத் தேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 婆歌

லால் அவற்றுள் ஒன்றை அவரிடத்து அலைந்து பெறுதல் அரிது. பெறினும், எழுதுவோர் கிடைப்பது அரிது. கிடைப்பினும், கூலி பெரி காகலின், கொடுத்து எழுதுவித்தல் அரிது. எழுதுவித்துக் கற்கப்புகின் கரவிகிதங்களால் பொதிந்த வழுக்களை நீக்கிப் பொருள் கொள்ளு தல் அரிது என்பது தெரிந்த தமிழ் நூலில் விருப்பமுடையோர் பலரும் பொருளுதவி செய்வாராயின், மதுரைக் காண்டமும் உரை யோடு விரைவில் அச்சிட்டு முடியும். தமிழில் இந்நூல் இயலிசை நாடகம் மூன்றும் ஒருங்கு உணர இருத்தலால் யாவருக்கும் பெரும்பயன் தரும் என உணர்க!”

பழந்தமிழுக்கு வாழ்வளிக்க கினைத்த சுப்ப ராயச் செட்டியாரின் திருவுள்ளத்தை விளக்க அவரே மனம் உருகி எழுதியுள்ள இந்த ஈர B ன் மொ ழி களே சான்ருகுமன்ருே ? திரு. செட்டியார் அவர்கள் மேற்குறித்த சிலப்பதி காரப் புகார்க்காண்டப் பதிப்பிற்கு விலை 1-12-0 ஆகக் குறித்துள்ளார். மதுரைக் காண்டமும் பின்னர் அதே விலையில் வரும் என்றும் அறிவிக் கை செய்துள்ளனர். திரு. செட்டியார் அவர்கள் பதிப்பு வெளிவந்து நான்கு ஆண்டுகட்குப்பின் 1855-ஆம் ஆண்டில் சென்னை மாகிலக் கல்லூரியில் தமிழாசிரியராய் இருந்த திரு. சீனிவாசராகவாசாரியார் சிலப் பதிகாரப் புகார்க் காண்டத்தை மட்டும் வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/58&oldid=560611" இலிருந்து மீள்விக்கப்பட்டது