பக்கம்:சிலம்புத் தேன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5% சிலம்புத் தேன்

செட்டியாரவர்களின் பதிப்பிற்குப் பின் னர்ச் சிலப்பதிகாரம் முதன்முதல் கண்ட மிகச் சிறந்த பதிப்பு ஐயர் பதிப்பே. பல பிரதி ரூபங்களைக்கொண்டு பரிசோதித்துப் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் ஐய ரவர்கள் அரிதின் முயன்று வெளியிட்ட சிலப் பதிகாரப் பதிப்பு, செந்தமிழ் அன்னேக்குக் செய்யப்பட்ட ஒப்புவமையில்லா ஒரு பெருஞ் சேவையாகும். ஐயரவர்களின் சிலப்பதிகாரப் பதிப்பால் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி புத்துயிர் பெற்றது; தமிழ் நாட்டின் நாகரிக வரலாறு உலகின் கண்களுக்கு முன்னினும் பன்மடங்கு சீரிய முறையில் விளக்கமாயிற்று. தமிழ் இசை இயக்கமும் தமிழ் நாட்டின் உரிமை பற்றிய பல்வேறு இயக்கங்களும் தோன்றுதற்கு ஐயரவர்களின் இப்பதிப்பு ஆரவாரமில்லாத வகையில் வித்திட்டது.

ஐயரவர்களைப் போன்றரின் இ லக் கிய முயற்சிகளாலும் பாரத நாட் டி ல் திலகர் போன்ற தியாக சிலர்களால் தொடங்கி வைக் கப் பெற்ற சுதந்தர வெறியாலும் தமிழ் வெறியும் விடுதலே. வெறியும் கொண்டு தித்தித் கும் தமிழால் நாட்டு மக்களுக்கெல்லாம் தேச பத்திக் கனலே மூட்டியவர் அமரகவி பாரதியார். பாவலர் என்ற முறையிலும் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையிலும் சிலம்பின் ஒளி விளங்கச் செய்த சீரியோர் வரிசையில் அவரும் சிறந்த இடம் பெறுகின்றர். தமிழ் நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/59&oldid=560612" இலிருந்து மீள்விக்கப்பட்டது