பக்கம்:சிலம்புத் தேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 59

விளங்கும் பேறு பெற்றுள்ளன. பொது வகை யில் சிலப்பதிகாரத்தை ஆராயாமல் அக்காவி யத்தின் தலே சிறந்த பாத்திரங்களே துணுகி ஆராயும் முறையில் டாக்டர் மு. வ. அவர்களால் எழுதப்பெற்றுள்ள கண்ணகி’, ‘மாதவி ஆகிய இரு நூல்களும் இ ன் றைய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பெற்ற சிறந்த பரிசுகள். அவ் வாறே டாக்டர் மு.வ. அவர்கள் யாத்துள்ள இளங்கோ நாடக ம் தமிழ் இனத்திற்கு மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் ஒற் அறுமை உணர்வையும் ஊட்டி வாழ்விக்க வல்ல தாகும். அந்நாடகத்தால் இளங்கோ அடிக வின் உள்ளத்து உயர்வெல்லாம் புலனுகும்.

பேராசிரியர்கள் திரு. தெ. பொ. மீனுட்சி சுந்தர னுர், டாக்டர் திரு. அ. சிதம்பரநாதன் செட்டியார், டாக் டர் திரு. ம. இராச மாணிக்கனுர், தமிழறிஞர் கிரு. ஆ. சிவலிங்கனுர், திரு. சங்குப் புலவர், சிலம்புச் செல் வர் திரு. ம. பொ சிவஞானம், பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாதுரையார், திரு எம். சண்முகம் பிள்ளை, பேராசிரியர் திரு. அ. சீனிவாசராகவன், திரு. pவ பந்து பால், பேராசிரியர் திரு கே. சி. வன்மீக நாதன், பேராசிரியை திரு. அ. ரா. இந்திர முதலியோர் அவ்வப்போது வெளியிட்டு வரும் தம் அரிய கட்டுரைகளாலும் நூல்களாலும் முத்தமிழ்க் காப்பியத்திற்குச் செய்து வரும் தொண்டைத் தமிழ் மக்கள் நன்றி உணர்ச்சியுடன் நாளும் போற்றுதல் திண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/68&oldid=560621" இலிருந்து மீள்விக்கப்பட்டது