பக்கம்:சிலம்புத் தேன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிலம்புத் தேன்

மாய் இருந்த சான்றேர் பே ரா சி ரியர்டாக்டர் சேதுப்பிள்?ள அவர்களே." சிலப்பதிகார நூல் நயம் என்ற தலைப்பில் செந்தமிழ் மணங் கமழ அவர்கள் எழுதிய நூலே முதன்முதலாக சிலம்புச் செல்வத்தைச் சீரிய முறையில் நாட்டு மக்கள் அனேவர்க்கும் நன்கு அறிமுகப்படுத்தி யது. நூலெழுதிய முயற்சியோடு கில்லாது பட்டி தொட்டிகளில் எல்லாம் தம் சொல்லின் செல்வத்தில் சிலம்புச் செல்வத்தையும் சேர்த்து வழங்கிய பெரியவரும் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களே. சிலப்பதிகார இலக்கியம் செங் தமிழ் நாட்டின் வாழ்விற்குரிய இயக்கமாகவே இன்று மலர் ச் சி பெற்றுள்ளது என்ருல் அதற்கு ஆதிமூலமாய் விளங்கியவர்கள் நம் அருமைப் பேராசிரியர் அவர்களே.

சிலப்பதிகார நூல் நயத்தை ஒட்டிச் சிலப் பதிகார இன்பத்தைத் தமிழர்க்கு மறுமலர்ச்சி நடையில் வழங்க எழுந்த சிறந்த நூல் திரு. சுத்தானந்த பாரதியார் அவர்களின் சி லம்புச் செல்வம்.” இலக்கிய ஆராய்ச்சி நோக்குடன் சிலப்பதிகாரம் பற்றி எழுந்த மூன்று சிறந்த நூல்கள் பேராசிரியர் அவ்வை. சு. துரை சாமிப் பிள்ளே அவர்களின் சிலப்பதிகார் ஆராய்ச்சியும், திரு. மார்க்கபந்து சர்மா அவர் கள் சிலப்பதிகார ரசனேயும், திரு. ம. ரா. போ. குருசாமி அவர் க ளி ன் சிலப்பதி காரச் செய்தியுமாகும். இம்மூன்று நூல்களும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புப் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/67&oldid=560620" இலிருந்து மீள்விக்கப்பட்டது