பக்கம்:சிலம்புநெறி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

முடியுடை அரசர்கள் பலர் சூழ்ந்து போற்று. கின்றனர்; கற்புக் கடம் பூண்ட கண்ணகி தேவியிடம் நாடாளும் செங்கோன்மை தவறாதிருக்க வரம் வேண்டு கின்றனர். கண்ணகி பலராலும் போற்றப் பெறும் பத்தினித் தெய்வமாகிய வரலாறு, வாழ்க்கையில், பிறந்தது; வாழ்க்கைக்குத் துணை செய்வது.

மாதவி

சிலம்பில் கண்ணகிக்கு அடுத்த நிலையில் சிறப். பாகப் பேசப் பெறும் பாத்திரம் மாதவி. மாதவி விவாதத். திற்குரிய பாத்திரமாக விளங்கினாலும் அவள், விளங்கு புகழ் படைத்த பாத்திரமேயாம்.

மாதவி, அழகுத் திருவினள்; ஆடற் கலையில் சிறந்தவள், பாடற் கலையில் தேர்ந்தவள். மாதவி முத்திறத்திலும் சிறந்தவள் என்று கூறுகிறார் இளங்கோவடிகள். முத்திறமாவது மேற் சொன்ன ஆடலும், பாடலும், அழகும் என்பனவாகும். -

வானவர் மகளிராகிய ஊர்வசி, ரம்பை ஆகியோர் அழகிலும் ஆடல் திறத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறுதல் புாரண மரபு. மாதவி, முன்னைப் பிறப்பில் ஊர்வசியாக வாழ்ந்தவள், என்ற நம்பிக்கையையும் ஆசிரியர் இளங்கோவடிகள் நமக்குத் தருகின்றார்.

வானவர் மகளாக விளங்கிய ஊர்வசி, மாதவியாகப் பிறந்தாள், பேரழகியாக விளங்கினாள் என்பதில் வரலாற்றுச் சிறப்பு என்ன இருக்கிறது? மண்ணக மகளிர், வானக மகளிரை வென்று விளங்கியவர் என்று. கூறுதல்தான்் மண்ணக மகளிர்க்குச் சிறப்பாகும்.

சமணசமயச் சார்பில் சிந்திப்பவர்கள் ஊழ்ச்சிறப்பை

உணர்த்துவதற்காக எந்த ஒரு நிகழ்ச்சியையும் முற்பிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/100&oldid=702763" இலிருந்து மீள்விக்கப்பட்டது