பக்கம்:சிலம்புநெறி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 97

என்று திருக்குறள் பாராட்டும். மதுரை நகரத் தெய்வ மும் கண்ணகியைப் பெருந்தகைப் பெண்’ என்று பாராட்டுகிறது.

அடுத்து, வஞ்சிக்காண்டத்தில் - குன்றக்குரவையில் கண்ணகி தெய்வமெனப் போற்றப் பெறுகிறாள். மலை வாழ் குறவர், தங்கள் குலத்தில் கண்ணகி போன்றதொரு தெய்வம் இல்லையென்று போற்றுகின்றனர்.

'இவள் போலும் கங்குலக்கோர்

இருந்தெய்வம் இல்லை'

என்பது காண்க.

இளங்கோவடிகள், மண்ணக மாதர்க்கு அணியென விளங்கிய கண்ணகி, விண்ணக மாதர்க்கு விருந்தாக அமையும் அருட் காட்சியை நெஞ்சு குளிர எடுத்தோது கின்றார்.

"தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வங் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்னக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து.”

என்பது, இளங்கோவடிகள் வாக்கு.

கண்ணகி தவத்தால், நோன்பால் தெய்வமாயினாள். அவள் மட்டுமா? அவளை மனையாட்டியாகப் பெற்ற கோவலனும் விண்ணிழி விமானத்தில் விண்ணகம் செல்கிறான். ..

கண்ணகி, முடியுடை அரசர்களால் தொழுதேத்தும் பெருமை பெறுகிறாள். சேரன் செங்குட்டுவன் இமயத்துக் கல்லில் கண்ணகிக்குச் சிலை யெடுத்து கங்கை நீராட்டி, வஞ்சித் தலை நகரில் கோயிலில் எழுந்தருளச் செய் கிறான். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/99&oldid=702762" இலிருந்து மீள்விக்கப்பட்டது