பக்கம்:சிலம்புநெறி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அந்த நல்லொழுக்கம் தற்சார்புடையதாக அமைத்து விட்ட குறையே அது. ஆதலால், கண்ணகியை உயர்ந்தோர் பாராட்டுகின்றனர். இதனைக் காப்பியம் முழுதும் காணலாம்.

கவுந்தியடிகள் ஒரு துறவி. அதிலும் சமணத்துறவி. சமணத் துறவியருக்குப் பெண்மை இசைவிலாத ஒன்று. ஆயினும் கவுந்தியடிகள் கண்ணகியை மனங்குளிரப் பாராட்டுகிறார். ஏன்? தெய்வம் என்றே பாராட்டு கிறார். -

அருக தேவனையன்றி மற்றவரை வாழ்த்தாத கவுந்தியடிகளின் வாயினால் கண்ணகி தெய்வம் என்று போற்றப் பெறுதல் எளிதில் கிடைக்கத் தக்கதா? அல்லது கவுந்தியடிகளுக்குத்தான்் இங்ங்ணம் போற்றிப் பாராட்ட எளிதில் பாத்திரங்கள் கிடைக்குமா?

'கற்புக் கடம்பூண்டஇத் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்’’

என்று பாராட்டுகிறார் கவுந்தியடிகள்.

அடுத்து, மதுரை நகரத்தெய்வம் 'பெருந்த ைகப் பெண்ணோ!' என்று அழைக்கிறது. பெருந்தகை' என்ற சொல் வள்ளுவத்தில் மாட்சிமை பெற்றது.

'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்’ என்பது திருக்குறள்.

'பெருந்தகை’ என்பது, தான்் துன்பத்தை ஏற்றுக் கொண்டு மற்றவர்க்கு வாழ்வளித்தல் என்ற பண்பாடு ஆகும். கண்ணகி பூம்புகாரிலும் சரி, மதுரையிலும் சரி. துன்பத்தைத் தழுவியவள்; கோவலனை வாழ்வித்தவள். சிறந்த பெண் என்பதைப் பெண்ணின் பெருந்தக்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/98&oldid=702761" இலிருந்து மீள்விக்கப்பட்டது