பக்கம்:சிலம்புநெறி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 T தவத்திரு குன்றக்குடி அடிகளார்

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடை யதுபோர்த்துக்

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்த வெல்லாம் கின் கணவன்

திருந்தி செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி காவேரி!

என்று பாடினாள். இப்பாடலில் மாதவி, காவிரியின் கற்புக்குச் சோழனின் செங்கோலே காரணம் என்று பாடுகிறாள். இதில் யாதொரு தவறுமில்லை. இங்ங்னம் கறுவதன் மூலம் மனைவியின் கற்புக்குக் கணவன். காவலனாக அமையவேண்டும் என்பது பெறப்படுகிறது. இஃதொரு சிறந்த கருத்து. இந்த அளவோடு நின்றிருந். தால் மாதவியிடம் தவறு காண முடியாது. -

ஆனால் உணர்ச்சி வேகம் எல்லை கடந்து, போகிறது. கோவலன் நங்கை ஒருத்தியின் காதலில் சிக்கித் தவித்தேன் என்று பாடியதைப் போலவே. மாதவியும் தான்் ஒரு நெய்தல் தலைவனின் காதல் வழிப். பட்டதாகப் பாடுகிறாள். * ,

'அடையல் குருகே அடையல் எங்கானல்

அடையல் குருகே அடையல் எங்கானல் - உடைதிரைநீர்ச் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய் அடையல் குருகே அடையல் எங்கானல்"

என்று பாடுகிறாள்.

மாதவி இந்த உத்தியைக் கையாண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. கோவலன் போக்கில், தான்் கண்ட

குற்றத்தைக் கடிந்து சொல்லியிருந்தாலும் ஏற்றிருப் பான்; மனம் மாறுபடான். கோவலனின் நடைமுறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/110&oldid=702773" இலிருந்து மீள்விக்கப்பட்டது