பக்கம்:சிலம்புநெறி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'2 0 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல் மேல்கின்று தான்்சுரத்த லான்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்கு நீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான்

இளங்கோவடிகள் பாடிய இப்பாடல்கள் Gergefisir புகழை, சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்திருப்பது எண்ணுதலுக்குரியது.

- மக்கட் சமுதாய வரலாற்றில் அரசுகள் தோன்றிய

வுடன் வணிகர் சமுதாயம் தோன்றி வளர்கிறது. அரசு களை விடக் கூடவும் வணிகர்கள் கூடுதல் செல்வ ஆதாரங்களைப் பெற்று விளங்கினர் என்பது வரலாற்றுண்மை.

இன்றும் கூட மக்கட் சமுதாய வாழ்க்கையின் உயிர் நாடியாக விளங்கும் உழவர்களைவிட, வணிகர்களிடம் செல்வம் கூடுதலாகத்தான்் குவிந்திருக்கிறது. வணிகர் களே அரசை இயக்குகின்றனர். நடத்துகின்றனர்.

இதுபோல் பண்டைக் காலத்திலும் சோழப் பேரரசிற்குச் செல்வம் வேண்டும்போது கொடுத்து உதவும் தகுதியில் வாழ்ந்த குடும்பம் கோவலனின் குடும்பம். அரசு விழை திரு' என்பது இளங்கோவடிகள் வாக்கு. சமுதாய வளர்ச்சியில் வணிகர் சமுதாயத்தின் வளர்ச்சியை நினைவூட்டியவர் இளங்கோவடிகள்! இலக்கியத்தில் அரசு, வணிகர் என்ற சமுதாயப்படிமுறை வரலாற்றை உணர்த்தியது சிறப்பு. * . ,

வாழ்க்கைக்குச் செல்வம் தேவை. ஆயினும் செல்வம் மிகினும் குறையினும் துன்பம் செய்யும். சோழப் பேரரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/130&oldid=702793" இலிருந்து மீள்விக்கப்பட்டது