பக்கம்:சிலம்புநெறி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 129

ஆம்புகார் நகரம் செல்வத்தில் செழித்தது. அதனால் ஒழுக்கம் பாழ்பட்டது. முற்றவெளியில் மகளிரை விலை கூறும் அளவுக்குச் சோழநாட்டின் சூழல் கெட்டுவிட்டது. மாதவி ஆயிரம் கழஞ்சு பொன் கூறி விற்கப்படுகிறாள். கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் பூம்புகாரில் நிலவிய சமுதாய அமைப்பே என்று சிலம்பு உணர்த்துவது புதிய மரபு; புதிய நெறி.

ஊழில் நம்பிக்கை உடைய இளங்கோவடிகள் கோவலனின் வீழ்ச்சிக்கு ஊழைக் காரணமாகக் காட்டாது கோவலன் வாழ்ந்த சூழ்நிலையால் ஒழுக்கம் பாதித்துக் கெட்டுப் போனான் என்று கூறுவதன் மூலம் இலக்கிய உலகில் சூழலைப் பற்றிய சிந்தனையை அறிமுகப் படுத்தியது புதுமை. கோவலனின் வீழ்ச்சிக்கு காரண

மாயமைந்தது சூழல். இதனை,

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் கச்சுக் கொன்றேற்கு கன்னெறி புண்டோ:

என்று கோவலன் கூறுவதன் மூலம் அறியலாம்.

மாதவி, பரத்தையர் குலத்தில் பிறந்த பெண், ஆனால், சமுதாயத்திலேயே பர்த்தன்மையை அடியோடு அகற்றத் தவம் செய்த முதற்பெண். பரத்தமைத் தொழிலிலேயே ஈடுபடுவது மரபு என்றெல்லாம் சித்திரா :பதி முதலியோர். வற்புறுத்தியும் மாதவி பரத்தையாக வாழாமல் பத்தினியாக வர்ழ்ந்து வெற்றி பெற்றது சிலம்பு விளைவித்த புதுமை. - ,,,,

மாதவி, கோவலனைக் கணவனாகக் கொண்டே வர்ழ்கிறாள். கோவலன் பரத்தமை ஒழுக்கமுடிையவன் ஆயினும், மாதவி பரத்தையல்லள் பிறப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/131&oldid=702794" இலிருந்து மீள்விக்கப்பட்டது