பக்கம்:சிலம்புநெறி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ) 43

வளர்ந்து கொண்டிருக்கும். என்றாவது ஒருநாள்

பொருதிக் கொள்வர்; அழிவர். அதுபோலவே ஒரு பணியில், சிந்தனை ஒரு மித்த நிலையில் ஈடுபட்டால் அப்பணி சிறக்கும்; பயன்களைக் குவிக்கும்; புகழைத் தரும். - -

ஆதலால், பயன் தருவன சித்தத்தின் நிகழ்வன வாகிய சிந்தனையும், புத்தியின் நிகழ்வும், மனத்தின் இயக்கமுமே யாம். உயிரின் நுண்ணுடம்பின் அறி கருவி களின் நிகழ்வுக்குரிய பதிவுகள் உள்ளடங்கிக் கிடந்து அப்பதிவுகள் செயற்பாடுகளாக உருப் பெறுவதற்குரிய காலம் வரும்பொழுது, புலன்கள், பொறிகளின் வாயி லாகச் செயற்பாட்டுக்கும், பயனுக்கும் வருவது ஊழ். இஃது ஒரு தவிர்க்க முடியாத இயற்கை விதி; நியதி; அறத்தின் செயற்பாடு.

‘. ஊழ் மற்றவரின் படைப்பும் அல்ல; கடவுளின் கொடையும் அல்ல. உலகியலின் ஒழுங்கு அமைதிகளுள் ஊழ் அமைவும் ஒன்று. -

உலகியலில் இயற்கையில் வலிமையாக இருந்த புயல், பெரு மழை, வெள்ளம் முதலியவற்றை மனிதன் இன்று, வெற்றி பெற்று, ஆண்டு அனுபவிக்கிறான்.

- இயற்கையோடு அவன் நிகழ்த்தும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் மனித குலம் வெற்றி களையே பெற்று வருகிறது. ஒரோவழி, பெறும் தோல்வி கள் கூட வெற்றியின் வாயில்களாக அமைந்தன வேயன்றி, முற்றான தோல் விகள் அல்ல. -

அது போல ஊழியலின் ஒழுங்கமைவையும், மனிதன் வெற்றி காண முடியும் என்பது ஒரு கொள்கை,

ஊழியலின் ஒழுங்கமைவை வெற்றி பெறுதல் என்றால் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/45&oldid=702708" இலிருந்து மீள்விக்கப்பட்டது