பக்கம்:சிலம்புநெறி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 5:

இன்றிச் செல்வத்தைச் செல்வத்திற்காகவே ஈட்டிப் பாதுகாத்தல் பற்று ஆகும். இத்தகைய பற்று ஊழாக மாறும்.

ஒருத்தியை மணந்து, காதல் வாழ்க்கை வாழ்தல் பற்றாகாது. ஆனால், காதல் வாழ்க்கையின் இலக்கண மாகிய இன்புறுத்தலின் வழி இன்புறுதல் என்ற நெறி. பிறழின் ஊழ விளையும்.

பணி செய்தல், தொண்டு செய்தல் பற்றன்று. ஆனால் பணிகளை, தொண்டுகளை, புகழ் கருதியும், நன்றியினை எதிர்பார்த்தும், கைம்மாறுகளை எதிர் பார்த்தும் செய்தால் பற்று ஆகும்; ஊழ்விளையும். பணி களைப் பணிகளுக்காகவே மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே செய்தால் ஊழன்று.

அதாவது செய்யும் காரியங்களின் நோக்கம் தற்சார்புடையதாக மட்டுமே விளங்குவதும், வெறித். தன்மையுடன் துய்க்கும் இன்ப துன்ப உணர்வுகளும் ஊழாக வி ைள யு ம். இன்பத்தை ஈடுபாட்டுடன் ஆவலுடன் துய்த்தால் ஊழ் விளையும்.

தவிர்க்க முடியாதன போலவும், கடமைப்பாட்டுணர் வுடனும், இன்பங்களைத் துய்த்தல், தவறன்று; ஊழா காது. துன்பத்தையும் அங்ங்னமே கவலையின்றியும், நொந்து கொள்ளாமலும் துய்த்தால் ஊழ் தோன்றாது.

எல்லா ஊர்களையும் தமது ஊர்களாகவும் எல்லா ரை யும் சுற்றத்தாராகவும் கருதவேண்டும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரி அமரர் அறிஞர் அண்ணாவுக்குப் பிடித்தமான வரி. இது பரந்த -விரிந்த, உலகியல் ஒருமைக்கொள்கையையும் மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/53&oldid=702716" இலிருந்து மீள்விக்கப்பட்டது