பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

மன்னர்கள் கடற்கரையிலும் சில நகரங்களை அமைத்துக் கொண்டார்கள். சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இருப்பது காவிரிப்பூம்பட்டினம். அதைப் புகார் என்றும் சொல்வார்கள். அது பெரிய கடற்கரை நகரமாக விளங்கியது. பாண்டிநாட்டில் கொற்கை பெரிய கடற்கரைப் பட்டினம். சேரநாட்டின் தலைநகராகிய வஞ்சியே கடற்கரைப் பட்டினந்தான்; முசிறி என்ற பட்டினம் வேறு இருந்தது.


ந்த மூன்று நாடுகளில் சேரநாடு மேற்குக் கடற்கரை ஓரமாக இருப்பது; இன்று கேரளம் என்று வழங்கும் இடம் முழுவதும் முன்பு சேரநாடாக இருந்தது. சேரநாட்டில் மலைகள் மிகுதி. அதனால் அதை மலைநாடு என்றும் சொல்வது உண்டு. அக் காலத்தில் சேரநாட்டிலும் தமிழே வழங்கி வந்தது.

ஒவ்வோர் அரசருக்கும் தனித்தனியே மாலை, கொடி முதலிய அடையாளங்கள் உண்டு. சேரனுடைய அடையாள மாலை பனைமாலை. அவனுடைய கொடி விற்கொடி, அதாவது அவனுடைய கொடியில் வில்லின் உருவம் எழுதியிருக்கும்.

சேரமன்னர்களில் சிலர் இமயம்வரை சென்று தம் புகழை நிலைநாட்டினர்கள். தென்குமரி முதல் வடஇமயம் வரையில் தன் வீரத்தை நாட்டியவர்களில் ஒருவன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் வீரத்தாலும் கொடையாலும் புகழ் பெற்றவன். அற நெறி திறம்பாதவன். தன் குடிகளைத் தாய்போலப் பாதுகாப்பவன். புலவர் பெருமக்களைப் பாராட்டிப்