பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

139


 கோவலன் தன்மேல் மாதவியோ தோழிமாரோ குற்றம் சுமத்துவதாக எண்ணும் குறிப்பு உள்ளது.

3. அறிவேனேல் அடையேன்

மணலில் வலம்புரிச் சங்கு உழுத சுவடு மறையும்படிப் புன்னை மலர்த்தாது உதிரும் காணலிலே, இவளது கயல்கண் உண்டாக்கிய புண்ணுக்கு முலைகளே மருந்து போலும்! (8)

புலால் தின்னும் பறவை ஓட்டும் சாக்கில் கன்னி ஞாழலைக் கையால் ஓச்சும் இந்த அணங்கு இருப்பதை அறியேன்; அறிந்தால் வந்திரேன். (9)

மீன் விற்கும் உருவத்தில் கூற்றம் இருப்பதை அறியேன் அறிந்தால் வந்திரேன். (10)

யரோ ஒரு பெண்ணை எண்ணிக் கோவலன் கூறுவது போல் பாடல்கள் உள்ளன.

4. சிற்றுாரில் வாழ்கிறது

பிறரை வருத்தும் காமனுக்குத் துணையான முகம் திங்களாகும். அது சிற்றுாரில் வாழ்கிறது. (11)

மகளாய்க் கூற்றம் ஒன்று சிற்றுாரில் வாழ்கிறது. (12)

பறவை ஓட்டும் பெண் வடிவம் கொண்ட தெய்வம் ஒன்று வாழ்கிறது. (13)

5. இடர் செய்பவை

இடையும், (14): இணை விழிகளும் (15), இணை முலைகளும் (16) இடர் செய்கின்றன.

6. உயிர் கொல்வை

உன் குடும்பத்தினர் கடலில் புகுந்து உயிர் கொல்வர்; நீ என் உடலில் புக்கு உயிர் கொல்கிறாய். (17)