பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

229


பெறலரும் பெண்ணே! ஆருயிர் மருந்தே! உன்னை யான் என்னென்று புகழ்வேன்! மலையில் பிறவாத மணி என்பேனா - அலை கடலில் பிறவாத அமிழ்தம் என்பேனா - யாழினின்றும் பிறவாத இன்னிசை என்பேனா- என்றெல்லாம் அழியாத கட்டுரை பல கூறிப் பாராட்டினான்:

“அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று

உலவாக் கட்டுரை பல பாராட்டி...” (75-81)

என்பது பாடல் பகுதி. கோவலன் கண்ணகியை நோக்கிக் கூறியதாக இளங்கோ பாடியுள்ள இந்தப் பகுதி உலவாக் கட்டுரை எனப்பட்டுள்ளது. உலவாக் கட்டுரை என்றால், அழியாத அணிந்துரையாகும். ஆம்! இப்பகுதி எக்காலத்திலும் பலராலும் எடுத்தாளப்படக் கூடியதன்றோ?

கண்ணகி மாமியாரால் மகிழ்வெய்தப் பெற்று விருந்தோம்பும் பெருமையுடன் சில்லாண்டு காலம் கணவனோடு வாழ்ந்தாள். இவ்விதமாகக் கோவலனது பாராட்டையும் மாமியின் ஒத்துழைப்பையும் கண்ணகி பெற்றமை மனையறம் படுத்த காதையில் கூறப்பட்டுள்ளது.

கோவலன் கண்ணகியோடு உடலுறவு கொண்டிருக்க மாட்டான் என்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். கோவலன் படுக்கை அறையில்தான் இவ்வளவு பாராட்டியிருக்கமுடியும், கண்ணகி குழம்பு வைக்கப் புளி கரைத்துக் கொண்டிருந்த போதா இவ்வாறு பாராட்டியிருக்க