பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சுந்தர சண்முகனார்


பகுதிகளாம். தொல்காப்பியர் கூறியுள்ள ‘உரையொடு புணர்ந்த பழமை’யாகிய தொன்மை என்பதற்கு நச்சினார்க்கினியர் சிலப்பதிகாரத்தை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

இசை

அரங்கேற்று காதையில், இசை யாசிரியன், தண்ணுமை குழல் யாழ் ஆசிரியர்கள் ஆகியோரின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. வேனில் காதையில் நிலாமுற்றத்தில் மாதவி இசைத்தலும், கானல் வரிப் பாடல்களும், புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் பாணர்களுடன் பாடியதும், புணர்ந்த மகளிரின் இசையும், வேட்டுவவரி ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை ஆகிய இசைப் பாடல்களும், நடுகல் காதையில், படை மறவர்கட்குச் செங்குட்டுவன் இசை விருந்து அளித்ததும், வாழ்த்துக் காதையில், பெண்டிர் மூவர் முறையே சோழனைப் புகழ்ந்து அம்மானை வரியும் - பாண்டியனைப் புகழ்ந்து கந்துக வரியும் சேரனைப் புகழ்ந்து ஊசல் வரியும் - மூவேந்தர்களையும் சேர்த்துப் புகழ்ந்து வள்ளைப் பாட்டும் பாடியுள்ளமையும், இன்ன பிறவும் இசைப் பகுதிகளாகும்.

நாடகம்

இயலும் இசையும் அமைந்திருத்தலே நாடக உறுப்பு தானே.

இந்தக் காப்பியக் கதை தெருக் கூத்தாகவும், மேடை நாடகமாகவும், திரை ஓவிய நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.

அரங்கேற்று காதையில் அரங்க அமைப்பு விளக்கப்பெற்றுள்ளது. நாடகத்திற்கு வேண்டிய கதை மாந்தர்கள்