பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. கவுந்தியடிகளின் கடமையுணர்வு

துணை

‘துணையோ டல்லது நெடுவழி போகேல்’ என்பது அதிவீர ராம பாண்டியனின் வெற்றி வேற்கைப் (78) பாடல்: புகாரிலிருந்து ஒரு முப்பது காதம் (முந்நூறு கல்) தொலைவு கடந்து மதுரைக்கு யாருக்கும் தெரியாமல் இருட்டில் புறப்பட்டுச் சென்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் கிடைத்த அரிய பெரிய துணை கவுந்தியடிகள்.

அடிகள்

கவுந்தி ஒரு சமண சமயப் பெண் துறவி. புகாருக்கு மேற்கே ஒரு காவதத் தொலைவில் இருந்த கவுந்திப் பள்ளி என்னும் இடத்தில் தங்கியிருந்தார். ஆணாயினும் பெண்ணாயிலும் உயர்ந்தவர்களை அடிகள் என்று சொல்லும் மர்பு உண்டு. கோவலன் தீயொழுக்கம் புரிந் திருப்பினும், கண்ணகிக்கு அவன் உயர்ந்தவனாகத் தோன்றியதால் ‘அமுதம் உண்க அடிகள்’ எனக் கூறினாள். (கொலைக் களக் காதை-43).

உண்மையா?

கவுந்தி யடிகள் துணையாகச் சென்றது உண்மையிலேயே நடந்திருக்கக் கூடிய வரலாற்றுச் செய்தியா அல்லது,-கதை போகிற போக்குக்கு வாய்ப்பாக இளங்கோ அடிகள் படைத்துக்கொண்ட கற்பனைச் செய்தியா என்பது ஒருவகை ஆராய்ச்சிக்கு உரியது. இருவரும் புகாரைக் கடந்து - காவிரியைக் கடந்து ஒரு காவதம் சென்றதுமே கிடைத்து