பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

265


“மாதரி கேள் இம்மடங்தைதன் கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்

இடைக்குல மடங்தைக்கு அடைக்கலம் தந்தேன்”

(125-130)

என்பது பாடல் பகுதி.

கவுந்தியின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறந்ததே. மாசாத்துவானைக் குறிப்பிடுவதற்கு, “இவன் என் பெண்ணின் பேர்த்தி நாத்தனாரின் ஓரகத்தியின் தங்கை மகன்” என்று வேடிக்கையாகச் சொல்வது போல், கண்ணகியைக் காட்டி, இவளுடைய கணவனின் தந்தை மாசாத்துவான் என்று கவுந்தி கூறியிருப்பதில் சில நுட்பங்கள் உண்டு.

கோவலனைக் காட்டி இவன் தந்தை மாசாத்துவான் என்று கூறாமல், கண்ணகியைக் காட்டி இவள் கணவனின் தந்தை எனக் கவுந்தி கூறியதாக இளங்கோ பாடியிருப்பது, காப்பியக் கதைத் தலைவி கண்ணகி என்னும் அவளது முதன்மையைக் குறிப்பாக அறிவிக்கிறது. இந்தப் பெண்ணின் மாமனார் என நேராகச் சொல்லிவிடின், கோவலனைக் குறைவுபடுத்தியதாகும். மற்றும் கோவலனும் கண்ணகியும் கணவன் மனைவியர் என்ற அறிமுகமும் செய்ததாயிற்று.

சில குடும்பங்களில் தந்தையால் பிள்ளைக்கு மதிப்பு வரும். இன்னாருடைய மகன் இவன் என்று பிள்ளையை அறிமுகப்படுத்தல் வேண்டும். வேறு சில குடும்பங்களில் பிள்ளையால் தந்தைக்கு மதிப்பு ஏற்படும். இன்னாருடைய தந்தை இவர் என அறிமுகம் செய்தல் வேண்டும். ஆனால் கோவலன் நிலைமையோ இரங்கத் தக்கது! கோவலன்