பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

35


உய்த்துணர்வேயாகும். ஏலாதார் விட்டு விடலாம். நாள் agslstiq (Day Bazaar), -96) offilstiq (Night Bazaar) என்னும் வழக்காற்றில் நாள் என்பது பகலைக் குறிப்பது காண்க.

மற்றும் 'நற் கலங்கள் அளிமின்' என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்கட்கு எவ்வளவு பாத்திரங்கள் வீட்டிலிருப்பினும் மனம் நிறைவு கொள்ளாது. அலுமினியம், பித்தளை, செம்பு, எவர்சில்வர், வெள்ளி முதலிய இனங்களில் பலவகைப் பாத்திரங்கள் இருப்பினும், குயவர் அடுக்கி வைத்திருக்கும் மண் சட்டி - குடம் முதலியவற்றைக் கண்டுவிட்டால், 'ஆ! எவ்வளவு அழகு சாமான்கள்' என்று வாய் பிளப்பர். இங்கே மாதரி வீட்டிலும் பலவகைக் கலங்கள் இருக்கலாம். அவற்றுள் தாங்கள் பயன்படுத்தாத புதிய உயர்வகைக் கலங்களைத் தரவேண்டும் என்பதற்காக 'நற் கலங்கள்' எனப்பட்டது.

'நெடியாது அளிமின்' என்றது, அவர்கள் மிக்க பசியோடு வந்துள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க, இரவு வருவதற்குமுன் ஆக்கி உண்ணவேண்டும் என்பதற்காகவும் காலம் தாழ்த்தாது விரைந்து கொடுங்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது. பின்னர், உணவு ஆக்குதற்கு வேண்டிய அரிசி - காய்கறிகள் - பால், நெய், தயிர் முதலியன கொடுக்கப்பட்டனவாம். பாடல்:

"மடைக்கலம் தன்னொடு மாண்புடை மரபின்
கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி அரிசி தம்பால் பயனொடு

கோல்வளை மாதே கொள் கெனக் கொடுப்ப"
(23 - 28)